சீனா அதிபருக்கு 'அன்பான பாராட்டு' தெரிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

சீனாவில் கொரோனா வைரஸால் 82 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 5 ஆயிரத்திற்குள் தான் உள்ளது.

சீனா அதிபருக்கு 'அன்பான பாராட்டு' தெரிவித்த வடகொரிய அதிபர்  கிம் ஜாங் உன்
  • Share this:
கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ள சீனாவிற்கு அன்பான பாராட்டுகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் ஊஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்பதித்துள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டம் ஆடி வருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்துள்ளது.


சீனாவில் கொரோனா வைரஸால் 82 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 5 ஆயிரத்திற்குள் தான் உள்ளது. சீனாவின் பல மாகணங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொடர்புகொண்டு பாராட்டினார். இதுகுறித்து வடகொரியவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ''கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விசாரித்தார'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading