கொரோனா

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali

வடமாநிலங்களில் தீபாவளி ஷாப்பிங் செய்ய குவிந்த மக்கள்.. கேள்விக்குறியில் சமூக இடைவெளி..

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீபாவளியை கொண்டாட அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்காக மக்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதற்காக சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் தீபாவளி ஷாப்பிங் செய்ய குவிந்த மக்கள்.. கேள்விக்குறியில் சமூக இடைவெளி..
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஆரம்பமாகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீபாவளியை கொண்டாட அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்காக மக்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதற்காக சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* திருவிழாவிற்கு ஷாப்பிங் செய்ய குஜராத்தில் உள்ள சந்தைகளுக்கு மக்கள் திரண்டு வருகின்றனர். அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் நெரிசலான இடத்தில் அதிகம் கூடுவது மிகவும் ஆபத்தாகும்.


Also read... Gold Rate | தொடர்ச்சியாக சரிவில் இருந்த நிலையில், இன்று உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?* கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் அதனை மறந்து பண்டிகை முனைப்பில் இருக்கிறார்கள். குஜராத்தில் சந்தைகளில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள்.

* மக்கள் சந்தையில் கூட்டம் கூட்டமாக அலைமோதுவதால், குஜராத்தில் தீபாவளிக்குப் பிறகு தொற்று அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.* பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டாவில் முகக்கவங்கள் அணியாமல் கூட மக்கள் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

* பஞ்சாபில் உள்ள சந்தைகள் மிகவும் நெரிசலானவை அல்ல. ஆனால் சந்தைக்கு வரும் மக்களும் சரி, கடைக்காரர்களும் சரி கொரோனா வைரஸ்க்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டனர்.

* இதேபோல கொல்கத்தா மாநிலத்தில் வசிப்பவர்கள் பண்டிகை ஷாப்பிங்கில் மிகவும் பிஸியாக உள்ளனர்.

* கொல்கத்தாவில் ஷாப்பிங் செய்யும் போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரவலான மக்கள் எடுத்து வருகின்றனர்.

* கொல்கத்தாவில் சாலையோர ஸ்டாலில் இருந்து விளக்குகளை வாங்கும் பெண்கள்.

* மும்பையின் தாதர் சந்தையில் ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* கொரோனா பரவலுக்கு மத்தியில் எந்த கவலையும் இன்றி பண்டிகை ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading