முகப்பு /செய்தி /கொரோனா / தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

மாதிரி படம்

மாதிரி படம்

இன்று தொடங்கிய இந்த தடுப்பூசி போடும் பணி நாளை முதல், முழுவீச்சில் நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கியது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 2,783 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதற்கட்டமாக இன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், இது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டிய மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்தவரை 12 மையங்கள் மூலமும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 166 மையங்கள் மூலமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், முதல் நாளான இன்று 10 பிரபல மருத்துவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், மக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

இன்று தொடங்கிய இந்த தடுப்பூசி போடும் பணி நாளை முதல், முழுவீச்சில் நடைபெறும் என்றும், இதுவரை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 6 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ள தானும், சுகாதாரத்துறை செயலாளரும் பதிவு செய்திருப்பதாகவும், இதுவரை இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு காய்ச்சல் இருமல் போன்ற எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என்றும், ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும், இந்திய பிரதமருக்கும் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் வாழ்த்துக்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

First published:

Tags: Corona vaccine, Minister Vijayabaskar