எதிர்த்து கேள்வி கேட்டால் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவாங்க... ஒரு வருடமாக சம்பளமே இல்லாமல் பணியாற்றும் மருத்துவர்கள்..

20-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியமே வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மூத்த மருத்துவர் ஒருவர்.

எதிர்த்து கேள்வி கேட்டால் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவாங்க... ஒரு வருடமாக சம்பளமே இல்லாமல் பணியாற்றும் மருத்துவர்கள்..
கோப்புப்படம்
  • Share this:
நாடு முழுவதும் நோய் தொற்று அதிகரித்து வந்தாலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிவரும் மருத்துவர்களை ஒவ்வொரு நாடும் பாராட்டி போற்றி வருகிறது.

இறைவனுக்கு இணையாக இன்று அனைவரும் வணக்கங்குவது மருத்துவர்களை தான். ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர்கள் அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் மூத்த மருத்துவர்கள் பலர் இன்று மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.சென்னையில்  இயங்கி வரும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை என அனைத்து மருத்துவமனையிலும் இந்த நிலை தான்.

ஆம் , 20-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியமே வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் மூத்த மருத்துவர் ஒருவர்.


அவர் கூறியதாவது, “ ஆரம்பத்தில் ஏதோ வங்கி எண் கோளாறு என நினைத்து வந்த நிலையில் ஆனால் அடுத்தடுத்த மாதங்களும் சம்பளம் வழங்கவில்லை என்ற தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தது.

பின்னர் அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். தமக்கு மட்டும்தான் இந்த பிரச்சினை என நினைத்த நிலையில் இப்படி பலர் உள்ளனர். எனவே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சுகாதார துறை கூடுதல் செயலாளர்களுக்கு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் உரியவர்களிடம் சென்றாலும் முறையான பதில் இல்லை என மீண்டும் தங்களுக்கு ஏன் ஊதியம் வழங்கவில்லை என கேள்விகளை அனுப்பியுள்ளர் அதற்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பதில் இல்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம் என்ற அச்சம் இருக்கிறதுஎங்கள் பணியை பாராட்டி சுகாதார துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கும்  முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றால் பிரச்சினை தீரும் என நினைத்து CM செல்லுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இப்படியே ஓராண்டு கடந்துவிட்டது. தற்போது கொரோனோ காலத்தில் கூடுதல் பணியாற்றி வரும் நிலையில் தற்பொழுதும் சம்பளம் இல்லை என்ற நிலையைவிட ஏன் சம்பளம் வழங்கவில்லை? எப்போது சம்பளம் வழங்கப்படும்?
ஊதிய உயர்வு கிடைக்குமா? குறைந்தபட்சம் உரிய பதிலாவது கிடைக்குமா என்ற கேள்வியுடன் பணியாற்றும் மூத்த மருத்துவர்கள் பலர்.

மேலும் படிக்க...

போலீஸ் காவலில் நடந்த வதை மரணங்கள்: இழப்பீட்டை இழுத்தடிக்கும் தமிழக அரசு..

”இதற்காக பணியை விட்டு செல்லலாம் என்று நினைத்தாலும் மக்கள் சிரமத்தை கண்டு அப்படி ஒரு முடியவையும் எடுக்க முடியாமல் இருந்து வருகின்றது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அப்படி எந்த தகவலும் இல்லை எந்த புகாரும் வரவில்லை என உரிய பதில் அளிக்காமல் தட்டிக்கழித்து விடுகின்றனர்” என்று கூறுகின்றனர்
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading