• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஊரடங்கின்போது பசியால் யாரும் உயிரிழக்கவில்லை - கர்நாடக பாஜக தலைவர்

ஊரடங்கின்போது பசியால் யாரும் உயிரிழக்கவில்லை - கர்நாடக பாஜக தலைவர்

கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கதீல்.

கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கதீல்.

ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட இந்நாட்டில் யாரும் பசியால் உயிரிழக்கவில்லை என கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கதீல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட இந்நாட்டில் யாரும் பசியால் உயிரிழக்கவில்லை என கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கதீல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கூறிய நளின் குமார், கொரோனாவை இந்தியா கையாள்வதை ஒட்டுமொத்த உலகமும் போற்றுகிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில்லறை அரசியலுக்காக அதைப் பயன்படுத்துகிறார். மத்திய அரசு இந்த இக்கட்டான காலத்தையும் மிகத் திறம்பட கையாண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    Also see:



    பொது முடக்கம் பற்றி அவர் கூறுகையில், ”புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட யாருமே இந்நாட்டில் பசியால் உயிரிழக்கவில்லை. தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தந்தது. அது மட்டுமின்றி, அவர்களுக்கு உணவும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியது.

    கொரோனா வைரசுக்கு மதமோ சாதியோ இல்லை. எல்லாரும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்குக்கான அழைப்பை விடுத்தார். எல்லா மாநிலங்களும் வழிகாட்டுதல்களைக் கட்டாயம் முறையாகப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: