ஊரடங்கின்போது நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதியில்லை - சென்னை மாநகராட்சி

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

ஊரடங்கின்போது நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதியில்லை - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
pulse oximetre எனும் பரிசோதனைக் கருவியை மக்கள் தங்களது வீடுகளில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தங்களைக் கண்காணித்து உடல்நலம் குன்றும்போது உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசிய ஆணையர் பிரகாஷ்,
கொரோனா தடுப்புப் பணிகள் நிர்வாகம் சார்ந்து பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ முகாமினில் மக்கள் அதிகளவில் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று மட்டும் 38 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


தூய்மைப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வழக்கமாக சென்னை மாநகரத்தில் 5200 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் உருவாகும். தற்போதைய கொரோனா காலத்தில் 3200 டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதனைக் கையாளும் தூய்மைப் பணியாளர்களின் போக்குவரத்து வசதிக்காக தினமும் 95 மாநகரப் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுவதாகவும், வீட்டில் இருந்து பணிக்கு அதிகாலையில் விரைவாக பணிக்கு வருவதால் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து இன்று வரை காலை, மதியம் என இரண்டு வேளை சத்தான உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக தினமும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முகக்கவசம் வாரம் ஒரு முறை, காட்டன் கையுறை உள்ளிட்டவற்றை வழங்குவதாகக் கூறிய அவர், மாநகராட்சியில் இதுவரை 345 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 50 பேர் மீண்டு பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Also see:

தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் எந்தத் தடையும் இன்றி வழங்கபட்டு வருகிறது. வங்கிக் கணக்கில் தொடர்பான சிக்கலின் காரணமாக சிலருக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதமாகலாம். மற்றபடி கொரோனாவால் பாதிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் எந்தத் தடையும் இன்றி கிடைக்கும் என்றார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு ஒரு முறை மண்டல சுகாதார மருத்துவர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அறிகுறி தென்பட்ட உடன் தூய்மைப் பணியாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
களப் பணியின்போது களப் பணியாளர்களுக்கு கொரானா தடுப்புப் பணி மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் அப்படியாக ஒத்துழைப்பு தராதது பொது சுகாதாரச் சட்டத்தின்படி தவறு.

ஈ-பாஸ் பொறுத்தவரை மாநகராட்சியின் இணையதளத்தில் மட்டுமே பெற முடியும். கையால் எழுதித் தரப்படுவது போலியானது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமே ஊரடங்கு அமலப்படுத்தப்பட்டுள்ளது. ஈ-பாஸ் பெற தவறான வழிகளில் முயற்சி செய்வது மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றி கொள்வதற்குச் சமம்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் சாலைகளில் நடைபயிற்சி செய்கின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் சாலை மற்றும் பொதுவெளியில் வாக்கிங் செல்ல அனுமதி இல்லை. மீறுவோர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணியாதவர்கள், விதி மீறும் வாகன ஓட்டிகள் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading