COVID-19 | கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே கொரோனா- சீனா வெளியிட்ட தகவல்!

கொரோனா இரண்டாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்படாததால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

கொரோனா இரண்டாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்படாததால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

  • Share this:
கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 21 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக சீனா கூறியுள்ளது.

சீனாவில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் இன்றுவரை உலகம் முழுவதையும் பெரும் சுகாதாரப் பேரிடருக்கு உள்ளாக்கியுள்ளது. முதல் அலை, இரண்டாவது அலை என உருமாறிக்கொண்டே இருக்கும் கொரோனா வைரஸ், தற்போது டெல்டா ப்ளஸ் என்ற பெயரில் மூன்றாம் அலையையும் உருவாக்கியுள்ளது. முதல் அலையில் வயதானவர்கள் அதிகம் பாதித்த நிலையில், இரண்டாம் அலையில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இரண்டாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்படாததால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பின. படுக்கைகள் மற்றும் முறையாக சிகிச்சை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இதனால் இடுகாடுகளும் நிரம்பி, குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதி மரியாதை கூட முறையாக செய்ய முடியாத அவல நிலை பல இடங்களில் ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் கங்கையில் குவியலாக பிணங்கள் தண்ணீரில் மிதந்து சென்றது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகளும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டன.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தளர்வில்லா ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் வேகம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டன. இதன் விளைவாக கொரோனா இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல், சீனாவில் தடுப்பூசி விரைவாக மக்களுக்கு செலுத்தப்பட்டது.

அடுத்தடுத்த அலைகளில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசியை அந்த நாடு போர்க்கால அடிப்படையில் செலுத்தியது. இதனால் முதல் அலையில் கடுமையான பாதிப்புகளை சந்தித்த சீனா, இரண்டாம் அலையை வெற்றிகரமாக கையாண்டது. அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கையும் மளமளவென குறைந்தது. இரண்டாவது அலையை ஏற்படுத்திய உருமாறிய கொரோனா வைரஸான சார்ஸ் கோவிட் 2 பாதிப்பு கண்டறியப்பட்டவுடன், சீனா விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்ததுடன் முழு ஊரடங்கையும் அறிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் 50க்கும் கீழாக சரிந்தது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் சீனாவில் 21 பேர் மட்டுமே புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களும் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு வந்தவர்கள் எனவும், நாட்டில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவிய வகையில் யாரும் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகவில்லை என அந்நாடு கூறியுள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 91,732 பேர். முழுமையாக குணமடைந்தவர்கள் 86,634 என தெரிவித்துள்ள சீனா, 4, 636 பேர் இறந்துள்ளதாக கூறியுள்ளது.
Published by:Archana R
First published: