தளர்வு அளிக்கப்பட்டாலும் வருமானம் இல்லை: உதகையில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் வாகன ஓட்டிகள்

உதகையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டாலும், சுற்றுலா வாகன ஓட்டிகள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

தளர்வு அளிக்கப்பட்டாலும் வருமானம் இல்லை: உதகையில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் வாகன ஓட்டிகள்
உதகை
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் உள்ளூர் வாகன ஓட்டிகள், அவர்களை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், முதுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட தொகையை அவர்களிடமிருந்து வாகன ஓட்டிகள் வசூல் செய்வார்கள்.

சுற்றுலா பயணிகளை நம்பியே வருமானம் ஈட்டிவந்த உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்தது கொரோனா ஊரடங்கு. மார்ச் முதல் மே வரையிலான சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த வாகன ஓட்டிகள், தற்போது வரை தங்களால் மீண்டுவர முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

ஊடரங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் இ-பாஸ் நடைமுறை இருப்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் ஏறுவதில்லை என வருத்தத்தோடு கூறுகின்றனர்.


மேலும் படிக்க...அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் இணைத் தலைவராக இந்திய-அமெரிக்கர் விவேக் மூர்த்தி நியமனம்..

குடும்பத்தை நடத்துவதற்கே வழியில்லாமல் சோர்ந்து போய் இருப்பதாகவும், இந்த நேரத்தில், ஓடாத வாகனங்களுக்கு காப்பீடுத் தொகை, ஈஎம்ஐ, இன்சூரன்ஸ் தொகையை கட்டுவதற்கு நெருக்கடி கொடுப்பதாகவும் வாகன ஓட்டிகள் கலங்குகின்றனர்.இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துவிட்டு அனைத்து சுற்றுலா தலங்களையும் திறந்துவிட்டால் மட்டும்தான் தங்களால் பிழைக்க முடியும் எனக்கூறும் வாகனஓட்டிகள், அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading