கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை: 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர் (வீடியோ)

கொரோனாவிற்கு அளிக்கப்படும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பலனின்றி ஒரு சதவீதம் கூட இறப்பு இல்லாமல் முழுமையான குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை: 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர் (வீடியோ)
  • Share this:
சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இங்கே  தொற்று பாதித்தவர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள பல்வேறு விளையாட்டுகளை விளையாட வைக்கின்றனர். அத்துடன் சேர்த்து 5 வேலை மூலிகை குடிநீரும் பருக வெண்டும் மற்றபடி நீங்க சுதந்திரமாக விளையாடி மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் சித்தா சிகிச்சை அளிக்க சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ள சித்த மருத்துவர் வீரபாபு இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணமடைய வைத்துள்ளார்.ஆரம்பத்தில் 90வயது  வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் தமிழக அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  மட்டுமே இங்கே சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சதவீதம் கூட இறப்பு விகிதம் இல்லாமல் முழுமையான குணம் அடைந்து பட்டியல் சித்த மருத்துவத்தில் கிடைத்து இருப்பதால் தமிழகம் முழுவதும் பல்வேறு கொரோனோ சித்தா கேர் சென்டரை ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading