• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நெல்லையில் பரிசோதனை மையத்தில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று - தொய்வடைந்த பரிசோதனை பணிகள்

நெல்லையில் பரிசோதனை மையத்தில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று - தொய்வடைந்த பரிசோதனை பணிகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக் கூடம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் 900 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படுகிறது. நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் மற்றும் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் மாதிரிகள் மட்டுமல்லாது, கோவில்பட்டி தென்காசி விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மாதிரிகள் கொண்டு வரப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதில் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இங்கே பணியாற்றிய பெண் மருத்துவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ஒரு மருத்துவர், இரண்டு ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, இதில் பணியாற்றிய 10 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருசிலருக்கு தொற்று அறிகுறி இருப்பதாகத் தெரிகிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால் தொற்று கண்டறியும் சோதனைகள் முழு அளவில்  நடத்தப்படுவது தடைபட்டுள்ளது. 3 கருவிகளில் தலா 300 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், கடந்த 2 தினங்களாக ஒரே ஒரு கருவியில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also see:

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் என்பது குறித்த முறையான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாததால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. பரிசோதனைகளும் தடைபட்டுள்ளது.

இதனால் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. 24 மணிநேரமும் இயங்கிய பரிசோதனைக் கூடம் தற்போது குறைந்த அளவு பணியார்களுடன் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மருத்துவமனையில் விசாரித்தபோது, மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து 20 பேர் பரிசோதனைக் கூடத்தில் பணியாற்ற வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த சில தினங்களில் முழு அளவில் மீண்டும் சோதனைகள்  மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: