தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

பிரிட்டனில் இருந்த வந்த 13 பேர் மற்றும், தொடர்பில் இருந்த 15 பேர் என மொத்தம் 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 • Share this:
  புதிய வகை கொரோனா பரவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  இது குறித்து அவர் கூறுகையில், பிரிட்டனிலிருந்து வந்தவர்களின் தொடர்பிலிருந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். நேற்று வரை 25 பேர் கண்டறியப் பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேர் கண்டறியப் பட்டு இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள், புனேவுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அந்த மாதிரிகளின் முடிவுகளை மத்திய அரசுதான் வெளியிடும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

  எனவே, பிரிட்டனில் இருந்த வந்த 13 பேர் மற்றும், தொடர்பில் இருந்த 15 பேர் என மொத்தம் 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும், மார்பக புற்றுநோய் இந்தியாவிலேயே சென்னையில்தான் அதிகம் என்று, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாராத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று கூறிய விஜயபாஸ்கர், அந்த ஆய்வின் அறிக்கையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வெளியிட்டார்.
  Published by:Suresh V
  First published: