கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை அலட்சியம் கூடாது என நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒன்றே முக்கால் லட்சம் வீடுகளுக்கான திறப்பு விழா நடைபெற்றது. அதில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் அவசியம் என்றார். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.