ஆம்புலன்ஸ் இல்லாமல் பைக்கிலேயே தாயின் உடலைக் கொண்டு சென்ற மகன்: டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள் இறந்த பெண்

வீடியோ படம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளத்தில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகளுடன் இருந்த பெண் ஒருவர் இறந்து போக மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்தவரை பைக்கிலேயே இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற கொடுமை நடந்துள்ளது.

 • Share this:
  ஆந்திராவிலும் கொரோனா தீவிரப் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருந்துள்ளன, இதனையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள்ளாகவே அந்தப் பெண் திடீரென உயிரிழந்தார்.

  ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி திங்களன்று கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நோய் தீவிரமடைய மருத்துவமனையிலேயே இறந்து போனார்.

  ஆம்புலன்ஸோ அல்லது வேறு வாகனங்களோ இருந்தால் உடலை ஏற்றிச் சென்று விடலாம் என்று இறந்த பெண்மணியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஒரு ஆம்புலன்ஸும், வாகனமும் கிடைக்காததால் பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் உட்காரவைத்தே இடுகாட்டுக்கு உடலைக் கொண்டு சென்றனர்.

  ஆந்திராவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 3 அம்சத் திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஆக்சிஜன், தரமான உணவு, மருந்து குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஆகிய உத்திகளை நேற்று அறிவுறுத்தியது. இதோடு கோவிட் 19 நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, இதோடு சேவைகளைத் தடம் காண 104 என்ற எண் கால்செண்டர்கள்.

  மேலும் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கண்காணிக்கத் தனிப்பிரிவு என்று ஆந்திராவில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இத்தனை நடைமுறைகள் இருந்தும் ஆம்புலன்ஸ் இல்லாமல் இறந்தவர் உடலை பைக்கிலேயே கொண்டு செல்லும் கொடுமையும் நடந்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: