கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பங்கு - விளக்கிய நிடா அம்பானி

RIL AGM 2020 | ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளாஸ், ஜியோ டிவி பிளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பங்கு - விளக்கிய நிடா அம்பானி
நிடா அம்பானி
  • News18
  • Last Updated: July 15, 2020, 5:42 PM IST
  • Share this:
எண்ணெய், தொலைதொடர்புத்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளில் முன்னணி நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கொரோனா காலத்திற்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.


பேஸ்புக் உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளாஸ், ஜியோ டிவி பிளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நிடா அம்பானி பேசுகையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணிகள் குறித்து விவரித்தார்.


படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
பி.எம் கேர்ஸ் நிதியுதவி, 2 வாரங்களி 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்கியது, 1 லட்சம் முகக்கவசங்கள், 1 லட்சம் பாதுகாப்பு கவச உடை ஆகியவை தயாரித்து வழங்கப்பட்டது குறித்து நிடா அம்பானி எடுத்துரைத்தார்.

மேலும், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு வசதியாக ஜியோ வழங்கிய ப்ளான்கள், பல லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது குறித்தும் நிடா அம்பானி பேசினார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading