• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? : நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? : நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துக் கூறினார். அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

  • Share this:
    இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துக் கூறினார். அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸ் உலக வங்கிப் பணிகள் மற்றும் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் இந்தியா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் பற்றி நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு தலைவரிடம் விவாதித்தார். அப்போது கொரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாலும், கடந்த காலத்தை போல பெரிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்த மாட்டோம் என்று கூறினார்.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு 5 அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி திட்டம், நோயை கட்டுப்பாட்டுக்கான நடத்தை விதிமுறைகள் ஆகிய 5 அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார். இதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    கொரோனா 2ஆவது அலை ஏற்பட்டு இருந்தாலும், பெரிய அளவில் முடக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கிவிடும் நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதே நேரத்தில் நோயாளிகளை உள்ளூர் மட்டத்தில் தனிமைப்படுத்துவது, கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் நோய் கட்டுக்குள் வந்துவிடும் என்று கருதுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

    அத்துடன், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது, அதன் பயன்பாடு குறித்தும் அவர்கள் அப்போது விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து உலக வங்கி குழுதலைவர் பாராட்டு தெரிவித்தார்.

    Must Read :  தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

     

    அப்போது, நிதித் துறைகளில் மறு சீரமைப்பு, நீர் மேலாண்மை, சுகாதார மேம்பாடு, சிவில் சர்வீஸ் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் எல்இடி பல்புகளை அதிகமாக பயன்படுத்துதல், எரி பொருட்களில் எத்தனால் கலப்பதை அதிகப்படுத்துவது, பேட்டரி வாகனங்களை அதிகரிப்பது போன்றவை குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: