5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நிர்மலா சீதாராமன்

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை  வலுப்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  கூடுதலாக 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அவசரகால கடனுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், சுகாதாரம், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் 2வது அலை நாட்டு மக்களிடையே  சுகாதாரம் மட்டுமின்றி பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.  இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுகாதாரம், பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை  வலுப்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  கூடுதலாக 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அவசரகால கடனுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின்படி, சுற்றுலா துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் கடனை செலுத்தவும் தொழிலை  மீண்டும் தொடங்கவும் கடனுதவு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும்  என்று அவர் அறிவித்தார்.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ்  சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஊழியர்களின் மாத ஊதியம்  ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதம் என 24 சதவீதம் 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். ஒருவேளை வேலை வழங்கும் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால், பணியாளர்கள் பங்களிப்பான 12 சதவீதம் மட்டும் வழங்கப்படும்.  இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: