• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Nirmala Sitharaman Press Conference LIVE | ’தற்சார்பு இந்தியா’ திட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும் - நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Press Conference LIVE | ’தற்சார்பு இந்தியா’ திட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும் - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Press Conference | ₹ 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக நிர்மலா சீதாராமன் நான்காவது நாளாக இன்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட்டங்கள் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், போட்டிகளை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உழைத்து வருகிறது. பல துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது. உலக அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்த சவால்களை சந்திக்க நேரிடும்.

    ஏற்கனவே சிறு, குறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின அடிப்படை. பிரதமர் கூறிய தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

    நிலக்கரி, தாது, மின் விநியோகம் அனு சக்தி உள்ளிட்ட 8 துறைகளில் கொள்கை சீர்த்திருத்தம் செய்யப்படும். ஒவ்வொரு அமைச்சகத்திலும் இனி ''திட்ட மேம்பாட்டு பிரிவு'' புதிதாக உருவாக்கப்படும். தொழில் பூங்காக்களை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளது. நாடு முழுக்க உள்ள தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

    LIVE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: