பொது சுகாதாரத்துக்கு கூடுதலாக ரூ.23,220 கோடி- குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம்: மத்திய அரசு

கோப்புப் படம்

நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் பாரத் நெட் திட்டத்துக்கு கூடுதலாக 19,041 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

  • Share this:
பொது சுகாதாரத்துக்காக ரூ.23,220 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படுவதாகவும் குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது சுகாதாரத்திற்கு மேற்கொண்டு 23,220 கோடி ஒதுக்கப்படுவதாகவும், மாவட்ட, உள் மாவட்ட அளவில் ஐ.சி.யு.  படுக்கைககள், ஆக்சிஜன் விநியோகம் ஆகியவை அதிகரிக்கப்படும் என்றும் குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.   மருத்துவ கருவிகள், மருந்துகள், தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுவது, ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை  தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் பாரத் நெட் திட்டத்துக்கு கூடுதலாக 19,041 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் இந்த திட்டத்திற்கான செலவு 61,09 கோடியாக உயர்ந்துள்ளது.  கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுவதோடு தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: தொழிலாளர்களுக்கான பி:எஃப். சலுகை நீட்டிப்பு..

பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பிராந்திய விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 77.45 கோடி ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: