முகப்பு /செய்தி /கொரோனா / Nirmala Sitharaman Press Conference | 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Press Conference | 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman Announcement | வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட்டங்கள் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், போட்டிகளை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உழைத்து வருகிறது. பல துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது. உலக அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்த சவால்களை சந்திக்க நேரிடும்.

ஏற்கனவே சிறு, குறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின அடிப்படை. பிரதமர் கூறிய தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

நிலக்கரி, தாது, மின் விநியோகம் அனு சக்தி உள்ளிட்ட 8 துறைகளில் கொள்கை சீர்த்திருத்தம் செய்யப்படும். ஒவ்வொரு அமைச்சகத்திலும் இனி ''திட்ட மேம்பாட்டு பிரிவு'' புதிதாக உருவாக்கப்படும். தொழில் பூங்காக்களை உருவாக்குவதற்காக 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளது. நாடு முழுக்க உள்ள தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

சுரங்கத் துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி. நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி தன்னிறைவு பெறுவதே நமது இலக்கு.

500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு. வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி. முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: CoronaVirus, Lockdown, Minister Nirmala Seetharaman