• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நீலகிரியில் இருமடங்காக அதிகரித்த கொரோனா தொற்று.. நேரடியாக ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

நீலகிரியில் இருமடங்காக அதிகரித்த கொரோனா தொற்று.. நேரடியாக ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுபாட்டில் இருந்து வந்தது. குறிப்பாக பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ- ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இருமடங்காக அதிகரிப்பால் மாவட்ட ஆட்சி தலைவரே சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார். அரசு பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களில் ஏறி சோதனை செய்த அவர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுபாட்டில் இருந்து வந்தது. குறிப்பாக பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ- ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் நேற்று 7 பேருக்கும் இன்று 13 பேருக்கும் உறுதியாகி உள்ளது. ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கை எட்டியுள்ளதால் மாட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு6 மாதம் சிறை தண்டனை வழங்கபடும் என மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று உதகை - பிங்கர்போஸ்ட் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது  அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தார். மேலும் அரசு பேருந்துகளில் ஏறி முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன் முகக்கவசம்  அணியாமல் வந்த சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் என 50 க்கு மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தார். அப்போது கொரோனா தொற்றின் அபாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையை அறிந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: