நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு தடை... நீலகிரியில் 1 லட்சத்திற்கு அதிகமான வியாபாரிகள் பாதிப்பு

நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு தடை... நீலகிரியில் 1 லட்சத்திற்கு அதிகமான வியாபாரிகள் பாதிப்பு

தங்கும் விடுதியின் உரிமையாளர்

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக தொடர்ந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள் எடுத்து, ரயில் பயணம் செய்தும், அவைகளை கண்டு ரசித்தும் செல்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில் சுற்றுலாவை நம்பியுள்ள சுமார் 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கபடுவார்கள்.  குறிப்பாக தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாலையோர கடை வியாபரிகள், சுற்றுலா வாகன ஒட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரசு இதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க... ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை இருமடங்களாக அதிகரிக்க முடிவு: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டிவிட்டரில் உறுதி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: