கொரோனா தடுப்பூசி பரிசோதனையை குழந்தைகளிடமும் நடத்த அனுமதி

கொரோனா தடுப்பூசிக்கான அடுத்தகட்ட முயற்சியாக குழந்தைகளிடம் அதை சோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஆராய்ச்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சிறுவர் சிறுமிகளை அடுத்த ஆண்டு பள்ளிக்கு அனுப்புவதற்கு ஏதுவாக ஏதேனும் ஒரு மருந்து வேலை செய்யுமா என தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க குழந்தை மருத்துவர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, கொரோனா வைரஸுக்கு வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமானால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டியிருக்கும். கடந்த வாரம், ஃபைசர் இன்க். நிறுவனம், 12 வயதிற்குட்பட்ட அமெரிக்க குழந்தைகளுக்கு அவர்கள் உருவாக்கிய தடுப்பூசியை சோதிக்க அனுமதி கிடைத்தது.

Also read: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 45

கொரோனா தடுப்பூசிகள் மக்கள் புழக்கத்துக்கு வரும்போது, அவை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பில்லை. சிறு வயதினரிடையே சோதனை செய்யப்படாவிட்டால் தடுப்பூசிகள் அவர்களுக்கு வழங்கப்படாது. இது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் ஒரு பெரிய தடையாக இருக்கக்கூடும்.

பொதுமக்கள் இதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று எமோரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் இவான் ஆண்டர்சன் கூறியுள்ளார். இவர் கொரோனா தடுப்பூசிகளின் குழந்தை பரிசோதனைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.அமெரிக்காவில் பதிவான கொரோனா பாதிப்புகளில் சுமார் 10 விழுக்காடு குழந்தைகள் உள்ளனர். இச்சூழலில், உலகளவில் குழந்தை ஆய்வுகள் போதிய அளவு வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவில், சினோவாக் மற்றும் சினோஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சோதிக்கக்கூடிய ஆய்வுகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் மாடர்னா இன்க்., ஜான்சன் & ஜான்சன் மற்றும் நோவாவாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெவ்வேறு வயதினரிடையே குழந்தைகள் சார்ந்த சில ஆராய்ச்சிகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Rizwan
First published: