கொரோனாவுக்கு எதிரான போர்: வீட்டில் இருந்தே செய்திவாசிக்கும் முறையை ஊக்குவிக்கும் நியூஸ்18 தமிழ்நாடு

Work From Home: கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வீட்டில் இருந்தே செய்தி வாசிக்கும் முறையை நியூஸ்18 தமிழ்நாடு ஊக்குவித்துள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது

  முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவது போன்றவற்றை முறையாக பின்பாற்றினாலே கொரோனா தொற்றை தவிர்க்கலாம். மேலும் அலுவலகம் சென்று பணிபுரிபவர்களுக்கு கொரேனா தொற்று ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

  கொரோனா பேரிடர் காலத்தில் அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு நியூஸ்18 தமிழ்நாடு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதி, அலுவலகத்தில் குறைந்த ஊழியர்களை கொண்டு இயக்குவது, கட்டாயம் முகக்கவசம் அணிவது , சமூக இடைவெளி, சுழற்சி முறையில் ஊழியர்களுக்கு பணி என அனைத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

  கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் தற்போது புதிய முயற்சியாக வீட்டிலிருந்தே செய்தி வாசிக்கும் முறையை நியூஸ்18 தமிழ்நாடு ஊக்குவித்துள்ளது. அதன்படி செய்தியாளர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே செய்தி வாசிக்கும் வசதியை செய்து கொடுத்துள்ளனர்.  முகக்கவசம் அணிவோம்.. அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்ப்போம்... கொரோனாவை வெல்வோம்...
  Published by:Vijay R
  First published: