நியூஸ் 18 செய்தி எதிரொலி - மஹாராஷ்டிராவில் தவித்த 1700 தமிழர்களுடன் இன்று புறப்படுகிறது சிறப்பு ரயில்

தமிழக மக்களை மீட்பதற்கான சிறப்பு ரயில் இன்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து கிளம்புகிறது

நியூஸ் 18 செய்தி எதிரொலி - மஹாராஷ்டிராவில் தவித்த 1700 தமிழர்களுடன் இன்று புறப்படுகிறது சிறப்பு ரயில்
மஹாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்கள்
  • Share this:
நியூஸ் 18 செய்தி எதிரொலியாக, மஹாராஷ்டிராவில் சிக்கித் தவித்த 1700 தமிழர்களை மீட்க சிறப்பு ரயில் இன்று புறப்படுகிறது.

தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1700க்கும் மேற்பட்ட மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

தினமும் 400 ரூபாய் கூலிக்காக மின் இணைப்பு, கேஸ் இணைப்பு வசதிகளுக்காக பள்ளம் தோண்டும் பணிகளை செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் அங்கு சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக தற்போது வேலையிழந்து தவித்து வரும் அவர்கள், தற்போது மகாராஷ்டிராவின் பாந்த்ரா,  கொரேகான், ஆரே, விஜயநகர பகுதிகளில் காட்டுக்குள் தார்ப்பாய் வீடுகளில் வசித்து வருகின்றனர்.


புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்காக சிறப்பு ரயில் வசதியை அரசு ஏற்பாடு செய்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அந்த மக்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள நிலையில், இருந்தும் அவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழகம் - மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இவர்களின் நிலை குறித்து நியூஸ்18 தமிழ்நாடு இரண்டு தினங்களுக்கு முன்பு (மே 21 அன்று) செய்தி வெளியிட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து அந்த மக்களை மீட்பதற்கான சிறப்பு ரயில் இன்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து கிளம்புகிறது. இந்த ரயிலில் 1,400 மக்களும், சில தினங்களில் மீண்டும் இயக்கப்பட உள்ள மற்றொரு ரயிலில் மீதமுள்ள மக்களும் தமிழகம் திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading