நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் குமரகுருபரன் கொரோனாவால் உயிரிழப்பு

குமரகுருபரன்

நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் குமரகுருபரன் கொரோனாவால் உயிரிழந்தார்.

 • Share this:
  திருவாரூர் மாவட்டம், அபிவிருத்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் குமரகுருபரன். நியூஸ் 18 தொலைக்காட்சியில் 'இப்படிக்கு இவர்கள்' நிகழ்ச்சியின் மூலம், சாமானிய மக்களின் சாதனைகளை பேசியவர். கேள்விகள் ஆயிரம் நிகழ்ச்சியின் மூலம், பொதுமக்களின் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு விடை கண்டவர்.

  நியூஸ் 18 தொலைக்காட்சி மட்டுமல்லாது, பணியாற்றிய பிற தொலைக்காட்சிகளிலும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை தயாரித்தவர் குமரகுருபரன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரரான குமரகுருபரன், 12 B, அஞ்சாதே, ஜோக்கர், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

  குமரகுருபரனுக்கு ராதிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குமரகுருபரனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நியூஸ் 18 தொலைகாட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
  Published by:Vijay R
  First published: