#IndiaGives அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கும் நியூஸ் 18 குழுமம்!

#IndiaGives அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்கும் நியூஸ் 18 குழுமம்!
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க நியூஸ் 18 குழுமம் முடிவு செய்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுதல் தவிர்க்கப்படும். அதேவேளையில் அரசின் இந்த நடவடிக்கையால் தினக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டினாலும், அரசுடன் இணைந்து நியூஸ் 18 குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பிரதமரின் நிவாரண நிதிக்கு நியூஸ் 18 குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகிறார்கள்.


இந்தக் கடினமான சூழ்நிலையில் நீங்களும் உதவிக்கரம் நீட்ட விரும்பினால் https://pmnrf.gov.in/en/online-donation என்ற இணையதளத்தின் வாயிலாக செலுத்தலாம்.



மேலும் படிக்க: கொரோனா சிகிச்சைக்கு பிரத்யேக மருத்துவமனை: களமிறங்கிய ரிலையன்ஸ்
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading