Home /News /coronavirus-latest-news /

கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக மாறியது நியூசிலாந்து

கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக மாறியது நியூசிலாந்து

நியூசிலாந்து பிரதமர் (Photo: Wikimedia commons)

நியூசிலாந்து பிரதமர் (Photo: Wikimedia commons)

oரு பக்கம் பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.

    நியூசிலாந்தில் கடைசியாக கடந்த மாதம் 22ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்போது குணடைந்துள்ளார்.

    50 லட்சம் பேர் வசிக்கும் நியூசிலாந்தில் மொத்தமே 1,500 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 22 பேர் உயிரிழந்தனர். கொரோனாவை ஒழிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    புதிய தொற்றாளர்கள் இல்லாத நிலையிலும் நாட்டின் எல்லை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவத் தொடங்கியதுமே பொது முடக்கத்தை அறிவித்து பரிசோதனைகளை அதிகரித்து தற்போது தொற்றை முழுமையாக நியூசிலாந்து கட்டுப்படுத்தியுள்ளது.

    Also read... ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? : தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் எச்சரிக்கைப் பட்டியல்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி