கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட கொரோனா குறித்த கருத்தரங்கம்..!

Coronavirus | "உலகம் முழுவதும் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 3994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது."

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட கொரோனா குறித்த கருத்தரங்கம்..!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: March 11, 2020, 3:07 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பற்றிய கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. சீனாவில் 80 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மூவாயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான ஊஹான் மாகாணத்துக்கு, பாதிப்புக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஷி ஜின் பிங் பயணம் மேற்கொண்டார்.

சீனாவுக்கு வெளியே 33 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 891 பேர் உயிரிழந்தனர். இதில் அதிக உயிரிழப்புகளை இத்தாலி சந்தித்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் ஆயிரத்து 807 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனாவுக்கு 463 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயணங்களை தவிர்க்குமாறும் அந்நாட்டு பிரதமர்அறிவுறுத்தியுள்ளார்.
இத்தாலியின் சில பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்த நாடும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இத்தாலி அரசு கூறியுள்ளது.

ஈரானில் 237 பேரும், தென்கொரியாவில் 54 பேரும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தலா 30 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 27 பேரும், ஜப்பானில் 9 பேரும், ஈராக்கில் 7 பேரும், டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 7 பேரும், கனடாவில் 5 பேரும் உயிரிழந்தனர். நெதர்லாந்தில் 4 பேரும், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரியாவில் தலா 3 பேரும், சான் மெரினோ, சுவிட்சர்லாந்தில் மற்றும் ஜெர்மனியில் தலா இருவரும் உயிரிழந்தனர். அர்ஜென்டைனா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, எகிப்து மற்றும் கனடாவில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 3994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 45 பேர் மட்டுமே சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 1 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மார்ச் 13-ம் தேதி, ’கொரோனா வைரஸ் பாதிப்பில் தொழில் செய்வது’ என்ற பெயரில் கருத்தரங்கு நடக்க இருந்தது. ஆனால், அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாலும், வேகமாக பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also See...
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading