பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு அதிரடி

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு அதிரடி

மாதிரிப் படம்

கொரோனா காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் கடற்கரை, சாலைகள் உள்ளிட்ட இடங்களில் வரும் 31ம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அதிகளவு கூட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சில வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவி வருவதாலும் நோய் தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also read: குருவாயூர் தேவசம்போர்டில் இருந்து பெறப்பட்ட ₹10 கோடி நிதி.. கேரள அரசு திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவு

  எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் வரும் 31ம் தேதி இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதியில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: