பிசியோதெரபி மருத்துவரின் புதிய முயற்சி - அமோகமாக விற்பனையாகும் வெட்டிவேர் முகக்கவசம்

உதகையில் பிசியோதெரபி மருத்துவர் ஒருவரின் முயற்சியால் வெட்டிவேர் முகக்கவசம் விற்பனை செய்யப்படுகிறது.

பிசியோதெரபி மருத்துவரின் புதிய முயற்சி - அமோகமாக விற்பனையாகும் வெட்டிவேர் முகக்கவசம்
(Photo: William/News18)
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று முகக்கவசம் அணிவது. தற்போதைய நிலையில் பல்வேறு வகையான முகக்கவசங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக வெட்டிவேர் முகக்கவசம் செய்து அசத்தி வருகிறார் உதகையைச் சேர்ந்த ஐஸ்வர்யா.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிசியோதெரபி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் ஐஸ்வர்யா. இவர் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதில் இவருக்கு கைகொடுத்தது வெட்டிவேர் முகக்கவசம். ஒரு கிலோ வெட்டி வேர் ரூ.1000க்கு பெற்று சாதாரண இரண்டு அடுக்கு துணி முகக்கவசத்தின் இடையில் வைத்துத் தைத்து விற்பனை செய்து வருகிறார்.

(Photo: William/News18)ஆரம்பத்தில் வெட்டிவேரின் தன்மை அறியாதததால் இந்த முகக்கவசத்தை யாரும் வாங்கவில்லை. ஆனால், தற்போது இந்த முகக்கவசத்தைப் பலரும் வாங்கிச் செல்வதாக மருத்துவர் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

Also see:
மேலும், இந்த முகக்கவசம் 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும், பின்பு சாதாரண நீரால் தூய்மைப்படுத்தினால் போதும் எனவும், இதனால் எந்த நோய் தொற்றும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் இந்தியா முழுவதும் தற்போது இந்த வெட்டி வேர் முகக்கவசத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் ஆர்டரின் அடிப்படையில் அவர்ளுக்கு அனுப்பி வைக்கிறார் ஐஸ்வர்யா.

ஒரு முகக்கவசம் தயாரிக்க 20 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை செலவு செய்வதால் மொத்தமாக வாங்குவோருக்கு 25 ரூபாயும், தனியாக வாங்கினால் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார். விற்பனை நோக்கத்தோடு இல்லாமல் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக முகக்கவசம் தயாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading