இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!

பழைய கொரோனா வைரசை விட இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருப்பது தெரியவந்துள்ளது.

பழைய கொரோனா வைரசை விட இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருப்பது தெரியவந்துள்ளது.

 • Share this:
  வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருகின்றது. இதனால், ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தின் பல்வேறு மாகாணங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்வதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

  இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பட்டனர். இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

  அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது. இந்த கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரசின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்தபோதும், பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருப்பதும் தெரியவந்தது.

  இந்நிலையில், வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதன்படி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இதேபோல, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன.

  கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் அதன் தகவமைப்பை மாற்றி வளர்சிதை மாற்றமடைந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
  Published by:Suresh V
  First published: