சமூக இடைவெளி கடைபிடித்தல் பலனளிக்கவில்லை.. மூடப்பட்ட இடங்களில் விரைவாக பரவும் கொரோனா தொற்று - ஆய்வில் தகவல்

கோவிட் -19 தொற்று மூடப்பட்ட இடங்களில் விரைவாக பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் புதிய ஆராய்ச்சியில் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக இடைவெளி கடைபிடித்தல் பலனளிக்கவில்லை.. மூடப்பட்ட இடங்களில் விரைவாக பரவும் கொரோனா தொற்று - ஆய்வில் தகவல்
கோவிட் -19 தொற்று மூடப்பட்ட இடங்களில் விரைவாக பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் புதிய ஆராய்ச்சியில் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 11:07 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் கொரோனா பரவல் குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யே ஷென், எங்கள் ஆய்வு கொரோனா தொற்று நீண்ட தூரத்திற்கு பரவுவதற்கான சான்றுகளை வழங்கியது என்றும், இது காற்றில் பறக்கக்கூடும் என்றும் கூறினார்.

’JAMA இன்டர்னல் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கோவிட் -19 நீர்த்துளிகள் மூலம் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு எளிதில் பரவக்கூடும் என நம்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக இடைவெளி மற்றும் கை கழுவுதல் போன்ற மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு விஷயங்கள் உலகளவில் கொரோனா பரவுவதைத் தடுக்கவில்லை. அதற்கு பதிலாக, புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்று யே ஷென் தெரிவிக்கிறார்.

இதனையடுத்து தொற்றுநோய் பரவல் குறித்து கண்டறிய சீனாவில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான இரண்டு பிராந்திய மையங்களைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர்களுடன் ஆராய்ச்சிக் குழு பணியாற்றியது. இந்த ஆராய்ச்சிக்கு ஒரு எளிய பரிசோதனை முறை மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்பாளர்களை இரண்டு பேருந்துகளை எடுத்துச் சென்றனர்.


இரண்டு பேருந்துகளிலும் ஏர் கண்டிஷனிங் இயங்கிய நிலையில், ஜன்னல்கள் மூடியிருந்தன. ஆனால், ஒரு பேருந்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களும், மற்றொரு பேருந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் இருந்ததாக ஆய்வு இணை ஆசிரியர் சாங்வே லி தகவல் அளித்துள்ளார்.

Also read: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்ஒரு வழிபாட்டு நிகழ்வில் இரண்டு பேருந்தில் சென்றவர்களும் ஒன்றாக கலந்துகொண்டாலும், அதன் பின்னர் நடத்திய சோதனையில் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பஸ் பயணிகளில் சிலருக்கு கோவிட் -19ன் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களுள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அருகில் அமரவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த கண்டுபிடிப்புகள் கோவிட் -19 ஒரு மூடப்பட்ட இடத்தில் புழக்கத்தில் இருக்கும் சிறந்த ஏரோசல் துகள்கள் (நீர்த் துளிகள்) மூலம் பரவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.கோவிட் -19 பரவும் வழிகளைப் புரிந்துகொள்வது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானது. எனவே அனைத்து சாத்தியமான வைரஸ் பரவும் வழிகளையும் கவனித்தால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என ஷென் தெரிவித்துள்ளார்.

தேசிய அறிவியல் அகாடமியில் வெளியான மற்றொரு ஆய்வறிக்கையில், சாதாரண உரையாடல் ஒரு கூம்பு வடிவிலான 'ஜெட் போன்ற' காற்றோட்டத்தை உருவாக்கும். இது பேசும் நபரின் வாயிலிருந்து வெளியாகும் சிறிய நீர்த் துளிகளின் தெளிப்பை விரைவாக மீட்டர் இடைவெளியில் கொண்டு செல்கிறது. இதுவும் கொரோனா பரவலுக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading