கொரோனா எளிதில் பரவும் இடங்கள் எவை? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா எளிதில் பரவும் இடங்கள் எவை? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

கோப்புப்படம்

மெட்ரோ பகுதிகளில் சராசரியாக, முழு சேவை உணவகங்கள், ஜிம்கள், ஹோட்டல்கள், கஃபேக்கள், மத நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சேவை உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்போது தொற்றுநோய்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும்

  • Share this:
உணவகங்கள், ஜிம்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்கள் முதலான இடங்களை நாம் தவிர்த்திருப்பது கொரோனா பரவுவதைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்த்தொற்றுக்கான அதிக ஆபத்து நிறைந்த இடங்களை அடையாளம் காண முயற்சிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, வைரஸ் எவ்வாறு, எங்கு பரவுகிறது என்பது குறித்து மக்கள் வைத்திருக்கும் கூடுதல் தகவல்களைக் கொண்டு எளிதில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது அவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

பின்வரும் விஷயங்களைக் கொண்டு கொரோனாவிற்கு அதிக ஆபத்து நிறைந்த இடங்களை நம்மால் ஓரளவு அடையாளம் காண முடியும்.

முகக்கவசங்கள், ஹேண்ட் சானிடைசர்கள், சமூக-இடைவெளி என உலகளாவிய தொற்றுநோய்க்கு பத்து மாதங்களாக நாம் புதிய நடைமுறை பழக்கத்திற்கு மேற்கொண்டு வருகிறோம். அதனுடனேயே இப்போது நாம் வெளியே செல்லத் தொடங்கிவிட்டோம். சிறு உணவகங்களில் சாப்பிடுகிறோம், திறந்தவெளி பொழுதுபோக்குகளை அனுபவிக்கிறோம், நெரிசலான இடங்களுக்கு வருவதை தவிர்க்கிறோம். ஆனாலும், இன்னும் கொரோனா பரவல் அதிகரித்துதான் வருகிறது.

Also read: எம்எல்ஏ மகனுக்கு குவாரி குத்தகை.. அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்

ஏனென்றால், மனித தொடர்புகள் முன்பை விட அதிகரித்துள்ளன. ஊரடங்கால் வீட்டிலிருந்தவர்கள் இப்போது வெளியே செல்கிறார்கள், அவர்கள் அத்தியாவசியங்களுக்காக மட்டுமே வெளியே செல்வதாகவும் கூறுகின்றனர். Nature-ல் வெளியிடப்பட்ட ஒரு புதிய விஞ்ஞான ஆய்வு, நீங்கள் கொரோனா அதிகம் பரவும் இடங்களைக் கண்டறிந்துள்ளது.

பெரிய நகரங்களில், குறைந்த அளவிலான மக்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் கொரோனா பரவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, உணவகங்கள், ஜிம்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்கள் முதலான இடங்களை நாம் தவிர்த்திருப்பது நோய் பரவுவதைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

உணவகங்கள், கஃபேக்கள், மளிகைக் கடைகள், ஜிம்கள், ஹோட்டல்கள், அத்துடன் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் மக்களின் நடமாட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்."மெட்ரோ பகுதிகளில் சராசரியாக, முழு சேவை உணவகங்கள், ஜிம்கள், ஹோட்டல்கள், கஃபேக்கள், மத நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட சேவை உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்போது தொற்றுநோய்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும்" என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், குறைந்த வருமானம் கொண்ட சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் இந்த மாதிரி கணித்துள்ளது.

மேலும், லெஸ்கோவெக்  எனும் ஆய்வாளர் கூறுகையில், "அதிக வருமானமுள்ள நபருடன் குறைந்த வருமானமுள்ள நபரை ஒப்பிடும்போது கொரோனா பரவும் ஆபத்து இரு மடங்கு அதிகம் என்று எங்கள் ஆய்வு கணித்துள்ளது" என்கிறார். இருப்பினும், இந்த ஆய்வில் குறைபாடுகளும் இருக்கலாம். ஏனெனில், இது அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வு அல்ல. ஒரு நாட்டின் 10 பெருநகரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மேலும், சிறைச்சாலைகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற பிற இடங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Rizwan
First published: