இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதத்தில், இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், முதலில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய இருவர் மற்றும் தொடர்பில் இருந்த ஒருவருக்கு, புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு 32 மாதிரிகளின் முடிவுகளும் வரவிருக்கின்றன. கேரளாவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸின் பாதிப்பு 6 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் 8 பேருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், அவற்றில் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.