வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணம் செய்யாத நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் ஆகியவை 3 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது.
இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். அதன்படி, வேலூரில் காய்கறி கடைகள், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்.
மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் ஆகியவை வாரம் மூன்று நாட்கள் அதாவது திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறந்திருக்கும். பால் விற்பனை நிலையம், தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் மட்டுமே செயல்படும்.
இறைச்சி கடைகள் ஊரடங்கு முடியும் வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பிரார்த்தனை செய்ய முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருந்துக்கடைகள் தினசரி வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.