முகப்பு /செய்தி /கொரோனா / மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு...

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு...

கோப்புப் படம்

கோப்புப் படம்

மகாராஷ்டிரா முழுவதும் இன்று முதல் ஜனவரி 5-ம் தேதி வரை, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

  • Last Updated :

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதில் டாப் லிஸ்ட்டில் இருந்தது மகாராஷ்டிரா மாநிலம்தான். அதிக அளவு மக்கள் இங்குதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸின் புதியவகை வடிவம் குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டு கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் விமான நிலையத்தில் நியூஸ் 18க்கு பேட்டியளித்த அவர், கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியலை தயாரித்து வருவதாக கூறினார்.

யானை-யை ரசித்த புலி: ட்வீட் செய்த ஆனந்த் மகிந்திரா

அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்திலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: CoronaVirus, Mumbai