நோய் எதிர்ப்பாற்றலையும், வாக்சின் ஆற்றலையும் மீறும் புதிய கொரோனா வகை: மேற்கு வங்கத்தில் பீதி 

படம். | பிடிஐ

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸின் புதிய உருமாறிய வகை ஒன்று மேற்கு வங்கத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸின் புதிய உருமாறிய வகை ஒன்று மேற்கு வங்கத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.

இந்தப் புதிய வகை B.1.618- வைரஸ் வகையின் E484K என்ற உருமாற்றமடைந்த புது வகை கொரோனாவாகியுள்ளது. சர்வதேச அளவில் இந்த புதிய மாறிய கொரோனா வைரஸ் வகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, இது மிகவும் கவலையளிக்கக் கூடிய புதுவகை ஆகும். இதில் சிக்கல் என்னவெனில் நம் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பாற்றலுக்கும் போக்குக் காட்டும், வாக்சின் தாக்கமும் இதனிடம் செல்லுபடியாகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய SARS-CoV-2 மரபணு ஆய்வியல் கூட்டமைப்பு என்ற 10 இந்திய வைரஸ் சோதனைக் கூடங்கள் ஏப்ரல் 8ம் தேதி கொரோனா வைரஸ் நோயாளிகளை தாக்கிய மரபணு தொடர் வரிசைப் படுத்தினர். இதில் இருமுறை உருமாறிய புதுவகை கொரோனா வகையைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

அதாவது, B.1.617 என்ற கொரோனா வகை E484Q மற்றும் L245R என்ற இருவகை உருமாற்றங்களை சந்தித்துள்ளன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்தி வந்தாலும் தற்போதையை இந்திய கொரோனா இரண்டாம் அலை தீவிர வீரியப் பரவலுக்கு இந்த உருமாறிய கொரோனா வகைமாதிரிதான் காரணமாக இருக்க வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்போது நாளொன்றுக்கு 2,70,000 புதிய கொரொனா தொற்று பாதிக்கப்பட்டோர் உருவாகி வருகின்றனர்.

உலகிலேயே தினசரி பாதிப்பு அதிகமான நாடாக இந்தியா மாறியுள்ளது, இதனால் இந்திய சுகாதார அமைப்பே ஆட்டம் கண்டுள்ளது .

B.1.618 என்ற கொரோனா வேரியண்ட் முதலில் அக்டோபர் 25, 2020-ல் கண்டறியப்பட்டு தனியாகப் பிரிக்கப்பட்டது. பிறகு சமீபத்தில் மார்ச் 17ம் தேதி மீண்டும் இது இருப்பதற்கான ஆதாரம் தெரியவந்தது. இதனுடன் தொடர்புடைய உருமாறிய கொரோனா வகை அமெரிக்கா, சுவிஸ், சிங்கப்பூர், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டது. கரோனா வைரஸ் மரபணுவில் உருமாற்றம் நடைபெறுவது இயல்பானது என்றாலும் உடலின் செல்களுடன் கொரோனா வைரஸைப் பிணைக்கும் ஸ்பைக் புரோட்டீனில் முக்கிய மாற்றங்கள் நெருக்கமாக அவதானிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.

B.1.618 வேரியண்டில் ஸ்பைக் புரோட்டீனில் 4 வகையான உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது அதிகம் தொற்றும் குணமுடையதாகவும் உடலின் நோய் எதிர்பாற்றலுக்கும் பெப்பே காட்டுவதும் தெரியவந்துள்ளது. இந்த உருமாறிய புதுவகைதான் மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் கொரோனா நோயாளிகளிடத்தில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதி மேற்கு வங்கம் 829 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பரவியதாகத் தெரிவித்தது. இது தற்போது தினசரி 7,000 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று 53,000 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் நோவாவாக்ஸ், மற்றும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் தென் ஆப்பிரிக்கா கொரோனா வேரியண்ட்டுக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Published by:Muthukumar
First published: