ஹோம் /நியூஸ் /கொரோனா /

தடுப்பூசி திறனை புதிய கொரோனா வைரஸ் பாதிக்காது- மத்திய அரசு

தடுப்பூசி திறனை புதிய கொரோனா வைரஸ் பாதிக்காது- மத்திய அரசு

கொரோனா வைரஸ் - கோப்பு படம்

கொரோனா வைரஸ் - கோப்பு படம்

கொரோனா வைரசின் இந்த உருமாற்றத்தால், சிகிச்சை வழிகாட்டுதல்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா வைரசின் புதிய உருமாற்றத்தால், சிகிச்சை வழிகாட்டுதல்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளின் செயல்திறனில் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது.கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள உருமாற்றம், இந்த தொற்றுநோயை எளிதில் மக்களிடம் பரவச்செய்யும் என்று நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார பிரிவைச் சேர்ந்த டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்தில் உருமாறி உருவானதாக கூறப்படும் ‘வியுஐ 202012/01’ கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த நாட்டுடனான விமான சேவையை பல்வேறு உலக நாடுகள் நிறுத்தியுள்ளன.

  இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இப்போதைக்கு நாங்கள் நடத்தியுள்ள விவாதங்கள், கிடைத்துள்ள தரவுகளின் புரிதல்கள், எங்கள் ஆழமான மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், யாரும் பீதி அடைய அவசியம் இல்லை. இந்த புதிய சவால் காரணமாக, நாம் விரிவான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

  மேலும், கொரோனா வைரசின் இந்த உருமாற்றத்தால், சிகிச்சை வழிகாட்டுதல்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளின் செயல்திறனில் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது.கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள உருமாற்றம், இந்த தொற்றுநோயை எளிதில் மக்களிடம் பரவச்செய்யும். இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகரித்துள்ளது, ஒரு விதத்தில் இவை ‘சூப்பர் ஸ்பிரெடர்’ என்று சொல்லத்தக்க விதத்தில் அதிவேகமாக பரவச்செய்யும். அதே நேரத்தில் மரணத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்காது.நோயின் தீவிரம் போன்றவற்றையும் அதிகரிக்காது என்றார்.

  எனவே, பீதி அடையத்தேவையில்லை என்றும், நமது நாட்டில் இன்னும் அந்த வைரஸ் கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், இந்தியாவில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றார் வி.கே.பால்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona virus, CoronaVirus, Covid-19 vaccine