99.9% வைரஸ், பாக்டீரியாவை கொல்லும் புதிய துணி மாஸ்க் கண்டுபிடிப்பு!

இந்த துணி மீண்டும் பயன்படுத்தக்கூடிய, ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிவைரஸ் துணி முகக்கவசங்கள் ஆகும்.

99.9% வைரஸ், பாக்டீரியாவை கொல்லும் புதிய துணி மாஸ்க் கண்டுபிடிப்பு!
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
மறுபயன்பாட்டுக்குறிய பருத்தி முகக்கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பகல் வெளிச்சத்தின் போது 60 நிமிடங்களுக்குள் 99.99% பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

நாம் தற்போது உபயோகித்து வரும் பல்வேறு துணி பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் இருமல் மற்றும் தும்மினால் வெளியிடப்படும் நானோ அளவிலான ஏரோசோல் துகள்களை வடிகட்டலாம். அவை கொரோனா உள்ளிட்ட நோய்களின் பரவலைக் குறைக்க உதவும்.

இருப்பினும், முகக்கவசத்தின் மேற்பரப்பில் நேரடி பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இன்னும் தொற்றுநோயாகவே இருக்கும் என்று ஏசிஎஸ் அப்ளைடு மெட்டீரியல்ஸ் & இன்டர்ஃபேஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், அமெரிக்காவின் டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய பருத்தி துணியை உருவாக்கியுள்ளனர். இது பகல் வெளிச்சத்தில் இருக்கும் போது எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களை (ROS) வெளியிடும். அவை துணி மேற்பரப்பில் இணைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும். இந்த துணிகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் முககவசங்களை உருவாக்கியுள்ளனர்.இவை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும், அணிந்திருப்பவருக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பணியில் இருக்கும் ஒரு நபர் மதிய உணவு நேரத்தில் வெளியில் வரும் போது பெறப்படும் சூரிய ஒளி மூலம் அவரின் முகக்கவசங்களை கிருமி நீக்கம் செய்யலாம்.அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவதன் மூலமோ அல்லது அதிக நேரம் ஒளி விளக்குகள் மூலமோ கிருமிகள் அழியாது. ஏனெனில் அவை சூரிய ஒளியை விட மிகக் குறைவான தீவிரம் கொண்டதாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். இந்த முககவசங்கள் சாதாரண பருத்தியுடன் 2-டைதிலாமினோஎத்தில் குளோரைடு (DEAE-Cl) இன் நேர்மறையான சார்ஜ் சங்கிலிகளை இணைப்பதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆண்டிமைக்ரோபியல் துணிகளை உருவாக்கினர்.

எப்போதும் உட்கார்ந்திருத்தல், படுத்துக்கொண்டிருத்தல் இறக்கும் அபாயத்தை உறுதிப்படுத்தும் செயல்கள் - ஆய்வு தெரிவிப்பது என்ன?

பின்னர் அந்த மாற்றியமைக்கப்பட்ட பருத்தியில் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட ஃபோட்டோசென்சிடிசரின் கொண்டு சாயமிட்டனர். இது ஒளியை வெளிப்படுத்தியவுடன் ROS ஐ வெளியிடும் ஒரு கலவை. இது வலுவான மின்னியல் தொடர்புகளால் DEAE சங்கிலிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோட்டோசென்சிடிசர் 99.9999 சதவீத பாக்டீரியாக்களைக் கொன்றதால் ரோஸ் பெங்கால் என்ற சாயத்தால் செய்யப்பட்ட துணி கண்டுபிடிக்கப்பட்டது. இது பகல் வெளிச்சத்தின் போது 60 நிமிடங்களுக்குள் துணியில் சேர்க்கப்பட்டிருக்கும் T7 பாக்டீரியோபேஜ்களை 99.9999% செயலிழக்கச் செய்தது.அதிலும், ஒரு வைரஸ் சில கொரோனா வைரஸ்களை விட ROS-ஐ 30 நிமிடங்களுக்குள் எதிர்க்கும் என்று கருதப்படுகிறது. மேற்கொண்டு நடத்திய சோதனையில், குறைந்தபட்சம் 10 தடவைகள் அந்த துணிகள் கையால் துவக்கப்பட்டது. இருப்பினும் அதன் ஆண்டிமைக்ரோபையல் தனது செயல்பாட்டை இழக்காமல் குறைந்தது 7 நாட்களுக்கு தொடர்ந்து பகல் வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். எனவே இந்த துணி மீண்டும் பயன்படுத்தக்கூடிய, ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிவைரஸ் துணி முகக்கவசங்கள் ஆகும். மேலும் இது பாதுகாப்பினை உருவாக்குவதற்கான உறுதிமொழியைக் காட்டுகிறது.
First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading