சென்னையில் புதிதாக 1,000 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்
சென்னையில் புதிதாக 1,000 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்
கோப்புப்படம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக மருத்துவர்கள் நியமிக்க ஆணையிட்டார். அதன்படி மருத்துவ மேற்படிப்பு முடித்த 1,000 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டித்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக மருத்துவர்கள் நியமிக்க ஆணையிட்டார். அதன்படி மருத்துவ மேற்படிப்பு முடித்த 1,000 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி உள்ளிட்ட 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அடுத்த 2 மாதங்களுக்கு பணிபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2570 செவிலியர்கள், 2500 சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்டோர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.