மணமகளுக்கு கொரோனா... வித்தியாசமாக கரம்பிடித்த மணமகன் - நெட்டிசன்கள் பாராட்டு

மணமகளுக்கு கொரோனா... வித்தியாசமாக கரம்பிடித்த மணமகன் - நெட்டிசன்கள் பாராட்டு

மணமகளுக்கு கொரோனா... வித்தியாசமாக கரம்பிடித்த மணமகன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மணமகளை வித்தியாசமாக யோசித்து கரம்பிடித்த மணமகனின் செயல் நெட்டிசன்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

  • Share this:
திருமணத்துக்கு 3 நாட்கள் முன்பு நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபருக்கு கொரோனா ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? பெரும்பாலும் அந்த திருமணம் தள்ளிப்போகும். அப்படித்தானே? ஆனால், அமெரிக்காவில் இளம் தம்பதியினர் வித்தியாசமாக யோசித்து, திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பாட்ரிக் மற்றும் ஜிம்மென்ஸ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்தனர். ஆனால், திருமணம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாக மணமகள் ஜிம்மென்ஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையறிந்த பாட்ரிக், தனது வருங்கால வாழ்க்கைத் துணைக்கு நம்பிக்கை அளித்ததுடன் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடத்தியே ஆகவேண்டும் என தீர்மானமாக இருந்திருக்கிறார். காரணம், திருமணம் செய்துகொள்வதற்காக இருவரும் அரசிடம் வாங்கிய திருமண பதிவுச் சான்று குறிப்பிட்ட தேதியுடன் காலாவதியாகிவிடும் எனும் நிலை இருந்தது.

வித்தியாசமாக யோசித்த பேட்ரிக், ஜிம்மென்ஸ் தங்கியிருந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நீண்ட ரிப்பனைக் கொடுத்து, மணவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அவர்களின் இந்த மண விழாவில் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மற்றவர்கள் காரில் அமர்ந்திருந்தவாறே தம்பதியினரை வாழ்த்திச் சென்றுள்ளனர்.
Also read: ரியோவிற்கு குரூப்பிஸம் வகுப்பெடுத்த ஆரி... ஷிவானிக்கு ஆதரவாக பாலாஜி

தங்களின் திருமண புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள மணமகள் ஜிம்மென்ஸ், ”இந்த நாளை எப்போதும் என்னால் மறக்க முடியாது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன். இருப்பினும் பாட்ரிக் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து என்னை மனைவியாக ஏற்றுக்கொண்டார். திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தோம். கொரோனாவால் அது நடக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

பாட்ரிக் பேசும்போது, " கொரோனா பாதிப்பு காரணமாக அவள் வேதனையடைந்தாள் என்பது எனக்குத் தெரியும். அதனால், ஜிம்மென்ஸை எப்படியாவது கரம்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்" எனத் தெரிவித்தார். தம்பதியரின் இந்த வித்தியாசமான முயற்சி இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இருவருக்கும் வாழ்த்து மழைகளைப் பொழிந்துவரும் நெட்டிசன்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும் வித்தியாசமாக யோசித்து ஜிம்மென்ஸை கரம்பிடித்த பாட்டிரிக்கு பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த திருமணத்தை புகைப்படம் எடுத்த ஜெசிகா என்ற புகைப்படக் கலைஞர் தன்னுடைய இணைய பதிவில், "2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் நான் படம்பிடித்த திருமணங்களில் இது ஸ்பெஷலானது" எனக் கூறியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள பாட்ரிக் - ஜிம்மென்ஸ் திருமண புகைப்படத்தில் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: