• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தாக்கத்தால் திருச்சியில் தேக்கமடைந்த நேந்திரம் வாழைத்தார்கள்... விலையும் வீழ்ச்சி...!

கொரோனா தாக்கத்தால் திருச்சியில் தேக்கமடைந்த நேந்திரம் வாழைத்தார்கள்... விலையும் வீழ்ச்சி...!

நேந்திரம் வாழை

நேந்திரம் வாழை

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் கடைகள் அடைக்கப்பட்டதால் கேரள வியாபாரிகள் நேர்திரம் கொள்முதலை  நிறுத்தியுள்ளனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தார்கள் திருச்சியில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதன் விலை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வயலூர், குழுமணி, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 நேந்திரம் வாழை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. இங்கு மொத்த வியாபாரிகளால்  கொள்முதல் செய்யப்படும் நேந்திரம் வாழைத் தார்கள் கேரளாவிற்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் கடைகள் அடைக்கப்பட்டதால் கேரள வியாபாரிகள் கொள்முதலை  நிறுத்தியுள்ளனர். இதனால், அறுவடைக் காலத்தில் தினசரி 100 -200 லாரிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 20 -30 லாரிகளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேந்திரம் வாழையை மொத்த கொள்முதலில் ஒரு கிலோ ₹ 25 வரை கொள்முதல் செய்த நிலையில் தற்போது ₹ 10 - 12 என வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏக்கருக்கு ₹ 2 லட்சம் வரை செலவு செய்த நிலையில், இதில்    ₹ 1 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயல் தாக்கத்திலிருந்து வாழை விவசாயிகள் மெல்ல மீண்டு வரும் நிலையில், இப்போது கொள்முதல் இல்லாமல் விலை வீழ்ச்சியால் வாழை விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

எனவே வாழை விவசாயிகளின் அச்சத்தைப் போக்கி, வாழ்வாதரத்தைக் காக்க, கூட்டுறவுத்துறை மூலம்  லாபகரமான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்து உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: