• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • முழு ஊரடங்கு அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார் - தமிழக வணிகர் சங்க பேரவை

முழு ஊரடங்கு அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார் - தமிழக வணிகர் சங்க பேரவை

விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கம்.

விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கம்.

மீண்டும் ஊரடங்கு கொண்டு வந்தால் கடைகளை அடைந்து ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் கூறியுள்ளார்

  • Share this:
கொரோனா வைரஸால் வணிகர்கள் சந்தித்துள்ள பிரச்னைகள் தொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணனை, விக்கிரமராஜா உள்ளிட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா, சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தினால், கடைகளை அடைத்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Also see:

மேலும், கோயம்பேடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டுகளைத் திறக்க அரசு அனுமதி தர வேண்டும் எனவும், அரசு கொடுக்கும் அனைத்து நிபந்தனைகளும் பின்பற்றப்படும் எனவும் உறுதி அளித்தார்.

மேலும் உள்ளாட்சித்துறை , அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடைகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு வாடகை ரத்து செய்ய வேண்டும் எனவும், வணிகர்களின் நலன் கருதி அடுத்த ஓராண்டுக்கு இந்தக் கடை வாடகையில் 50% சலுகைகள் அளித்திட கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: