• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்களுக்கு இடையில் 2021-ல் மட்டும் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்களுக்கு இடையில் 2021-ல் மட்டும் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

மாதிரிப் படம்.

மாதிரிப் படம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் புதுவகை கொரோனா ஸ்ட்ரெய்ன் நேரடியாக அறிகுறிகளே இல்லாமல் நுரையீரலைத் தாக்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், ஆனால் 2021ம் ஆண்டில் மட்டும் இதுவரை 9,300 மெட்ரிக் டன் பிராணவாயு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் புதுவகை கொரோனா ஸ்ட்ரெய்ன் நேரடியாக அறிகுறிகளே இல்லாமல் நுரையீரலைத் தாக்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், ஆனால் 2021ம் ஆண்டில் மட்டும் இதுவரை 9,300 மெட்ரிக் டன் பிராணவாயு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ஒரு புறம் ஆத்மநிர்பர் என்று பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது ஆளும் பாஜக, ஆனால் வாக்சின்கள், அத்தியாவசியமான பிராணவாயு ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது.

    2021 முதல் காலாண்டில் அதிகாரப் பூர்வ தகவல்களின்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 9,294 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4502 மெட்ரிக் டன்கள்தான் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான ஆக்சிஜன் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது திரவ பிராணவாயுவாகும். இது பிற்பாடு தொழிற்துறை மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்காக மாற்றப்படும்.

    9,294 மெட்ரிக் டன் பிராணவாயுவில் வங்கதேசத்துக்கு மட்டும் 8,828 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாகவே கூட இந்தியாவின் பிராணவாயுவை அதிகம் வாங்கும் நாடு வங்கதேசம் தான்.

    இந்தியாவில் பிராணவாயு பற்றாக்குறையினால் கொரோனா நுரையீரல் பாதிப்பு மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெரிய அளவில் இந்த ஆண்டு பிராணவாயு வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பன்னாட்டு நிறுவனமான லிண்டே குழுமத்தின் லிண்டே பங்களாதேஷ்தான் இந்தியாவின் பிராணவாயுவை பறித்து வருகிறது. 2021ம் ஆண்டின் இந்திய ஏற்றுமதி 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பிராணவாயு ஏற்றுமதியை அதிகரித்து விட்டு தற்போது 50,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இறக்குமதிக்காக மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.

    இதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுத் தூதகரங்களுக்கும் இந்திய சுகாதார அமைச்சகம், ‘பிராணவாயு இறக்குமதி ஆதாரங்களை’ கண்டறியுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்களுக்கு இடையில் நாட்டில் பிராணவாயு பற்றாக்குறை இல்லை என்று அரசு கூறிவருகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தி திறன்கள் பலமடங்கு அதிகம் உள்ளதாகக் கூறி வருகிறது.

    கடந்த வாரம் மகாராஷ்டிரா, உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள் பிராணவாயு பற்றாக்குறை பற்றி பிரச்சினை எழுப்பியது. அப்போது மத்திய அரசு இந்தியாவில் நாளொன்றுக்கு 7,127 மெட்ரிக் டன் பிராணவாயு உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகக் கூறியிருந்தது.

    ஏப்ரல் 18ம் தேதி இந்தியாவின் ஆக்ஸிஜன் நுகர்வு எப்போதும் இல்லாத அளவுக்கு 4,300 மெட்ரிக் டன்களாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: