'4 மாதமாக ஊசி, பாசி விற்காமல் வருவாய்க்கு வழி இல்லை' - வேதனையில் நரிக்குறவர்கள்

கொரோனா ஊரடங்கால் ஊசி, பாசி விற்க முடியாததால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக நரிக்குறவ மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தங்களின், அன்றாட தேவையை பூர்த்தி செய்ய, அரசு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

  • Share this:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மணவாசி முடக்குசாலை பகுதியில், 80-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாள்தோறும், ஊசி, பாசி விற்றால் தான் வீட்டில் உணவு உட்கொள்ளவே முடியும் என்ற நிலையில் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான் ஊரடங்குக்கு முன்பு தங்களது வாழ்க்கையை கடத்தி வந்தனர். ஆனால், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊசி, பாசி தொழில் முற்றுலும் முடங்கியதால் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். தற்போது, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட போதும், கொரோனா அச்சம் காரணமாக வியாபாரத்துக்கு செல்லும் தங்களை, பொதுமக்கள் சிலர் தடுப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.கரூர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் ஊசி, பாசி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததாக நரிக்குறவர் மக்கள் கூறுகின்றனர். ஆனால், மக்கள் நடமாட்டம் இல்லாதால் பொருட்களை விற்க முடியாமல் வருவாய் இன்றி வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கின்றன. இதனால், தங்களுக்கு வங்கி மூலம் கடனுதவி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.

மணவாசி முடக்குசாலையில் 80 நரிக்குறவர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 25 வீடுகள் மட்டுமே அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர். எனவே, எஞ்சிய குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: August 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading