995 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்: பிரதமருக்கு நாராயணசாமி மீண்டும் கடிதம்!

கொரோனா ஊரடங்கால் வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் புதுச்சேரி அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வரவில்லை.

995 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்: பிரதமருக்கு நாராயணசாமி மீண்டும் கடிதம்!
முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரிக்கு 995 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு நாராயணசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுச்சேரியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து வைத்திருக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பலர் வேண்டுமென்றே வெளியில் சுற்றி வருகின்றனர் என்றார்.

இதனால் மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, நாளை முதல் காலை 6 மணியில் இருந்து பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் அதன் பிறகு கடைகள் திறந்திருக்காது என்றும் தெரிவித்தார்.


இதில் மருந்து கடைகள் திறந்திருக்கும். பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி, பழக் கடைகள் அனைத்தும் செயல்படாது. மீறி திறந்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.கொரோனா நிவாரண நிதிக்கு  இன்றுவரை சுமார் 5 கோடி ரூபாயை அரசு ஊழியர்கள், பொதுமக்களும் கொடுத்துள்ளனர்.

புதுச்சேரிக்கு நிவாரணமாக ரூ.995 கோடி வழங்க வேண்டும். பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியும்  இதுவரை பதில் வரவில்லை. கொரோனா ஊரடங்கால் வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் புதுச்சேரி அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வரவில்லை.

ஆனால் மாநில அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக புதுச்சேரி அரசுக்கு ரூ. 995 கோடியை வழங்க வேண்டும் என மறு கடிதம், பிரதமருக்கு எழுதுகிறேன் என தெரிவித்தார்.பிரதமர் அதற்கு செவிசாய்ப்பார் என நம்புகிறேன். இனி வரும் காலம்  இக்கட்டான காலம். இச்சமயத்தில் மாநில அரசு அனைத்து சுமைகளையும் ஏற்க முடியாது. மத்திய அரசு துணைக்கு வர வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading