Home /News /coronavirus-latest-news /

சைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி!

சைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி!

உதவும் மனப்பான்மை என்பது தமிழர்களின் பிறப்போடு பிறந்தது என்பதற்கு 10 வயது சிறுமி கனகாவின் செயலே ஓர் எடுத்துக்காட்டு.  

உதவும் மனப்பான்மை என்பது தமிழர்களின் பிறப்போடு பிறந்தது என்பதற்கு 10 வயது சிறுமி கனகாவின் செயலே ஓர் எடுத்துக்காட்டு.  

உதவும் மனப்பான்மை என்பது தமிழர்களின் பிறப்போடு பிறந்தது என்பதற்கு 10 வயது சிறுமி கனகாவின் செயலே ஓர் எடுத்துக்காட்டு.  

நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தான் சைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்கியுள்ளார். 

பேரிடர் என்று வந்தால் உதவுவதில் தமிழர்களுக்கு என்றுமே முதலிடம். சுனாமி, கஜா புயல், என அத்துணை பேரிடர்களை சந்தித்து உள்ள நாகை மாவட்ட மக்களுக்கு அந்த காலங்களில் வெளியூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களே அதிக உதவிகளை செய்தனர்.

குறிப்பாக கஜா புயல் பாதிப்பு நேரத்தில் சென்னையில் இருந்து வேதாரண்யம் பகுதிக்கு வந்து உதவியர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி கஜா புயலால் கடுமையாக பாதித்து மீண்ட நாகை மாவட்டம் காமேஷ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. கூலி வேலை பார்க்கும் பூமாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கான்கிரீட் கருவியை இயக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஒற்றை கையை இழந்து விபத்துக்குள்ளானார்.

அதனை தொடர்ந்து நாகை மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்படும் காவல் நண்பர்கள் குழுவில் (Friends Of Police) இணைந்து கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையோடு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது 10 வயது மகளான கனகா, கொரோனா பாதிப்புகள் குறித்தும், முதல்வருக்கு பலதரப்பினரும் நிவாரணம் கொடுத்து வருவது குறித்தும் அன்றாடம் தொலைகாட்சியில் பார்த்து வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் ஏழை மக்களின் துயரத்தை தாங்க முடியாத சிறுமி கனகா, தான் ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஆச்சர்யம் அடைந்த தந்தை பூமாலை மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து இரண்டு வருடத்திற்கு முன்பு விபத்துக்குள்ளாகி தனது ஒற்றை கையை இழந்த இதே தினத்தில் மாவட்ட ஆட்சியரை குடும்பத்தோடு சந்தித்தனர். அவர்களை இன்முகத்தோடு வரவேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் சிறுகச், சிறுக சேமித்த சிறுமிகளின் 2210 ரூபாய் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக பெற்றுக்கொண்டு சிறுமியை வெகுவாக பாராட்டினார்.

உதவும் மனப்பான்மை என்பது தமிழர்களின் பிறப்போடு பிறந்தது என்பதற்கு 10 வயது சிறுமி கனகாவின் செயலே ஓர் எடுத்துக்காட்டு. சைக்கிள் வாங்க சேர்த்து வைத்து இருந்த உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்காக கொடுத்த நாகை காமேஷ்வரம் சிறுமி கனகாவுக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: Corona Warriors, Nagai, Vedaranyam

அடுத்த செய்தி