சீர்காழி அருகே நாகை - கடலூர் எல்லைகள் மூடல்

சீர்காழி அருகே நாகை - கடலூர் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. எனவே இ-பாஸ் இருந்தால் மட்டுமே எல்லையைத் தாண்ட அனுமதிக்கப்படுக்கிறது.

சீர்காழி அருகே நாகை - கடலூர் எல்லைகள் மூடல்
சீர்காழி அருகே நாகை - கடலூர் எல்லைகள் மூடல்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அங்கு பணிபுரியும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அதிக அளவில் செல்கின்றனர். இவர்களால் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்று பரவ  தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வருபவர்களைக் கண்காணிக்க மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பின்னணியில் நாகை மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடத்தில் சோதனைச் சாவடி அமைத்து எல்லை மூடப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தின் எல்லையான வல்லம்படுகையில் சோதனைச் சாவடி அமைத்து எல்லை மூடப்பட்டுள்ளது.

Also see:இவ்விரண்டு சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் எல்லை தாண்ட அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கடலூர் மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் வாகனங்கள் வரிசையாக காத்திருக்கின்றன.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading