• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்தில் கொண்டு சேர்த்த ஓட்டுநருக்கு கொரோனா தொற்று

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்தில் கொண்டு சேர்த்த ஓட்டுநருக்கு கொரோனா தொற்று

நாகை தேசிய நெடுஞ்சாலை

நாகை தேசிய நெடுஞ்சாலை

நாகை மாவட்டத்தில் இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களை சொந்த ஊரில் சேர்த்துவிட்டு நாகை திரும்பிய ஓட்டுனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  • Share this:
நாகை மாவட்டத்தை சேர்ந்த 53 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லிக் ஜமாஅத் மாநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

ஆனால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னையில் இருந்து நாகை திரும்புவர்களுக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையில் தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நாகை மாவட்டத்தில் பிழைப்பு நடத்தி வந்த ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.மணி என்ற தனியார் பேருந்தின் ஓட்டுனர் கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலம் அழைத்து சென்றுள்ளார்.

அவர்களை சொந்த ஊரில் சேர்த்துவிட்டு நெல்லூர், ஆந்திரா, கர்நாடகா வழியாக வரும் வழியில் அந்த பகுதிகளில் வேலை பார்த்துகொண்டு இருந்த  நாகை மாவட்டத்தை சேர்ந்த நபர்களையும், தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தில் பேருந்தை மறித்து ஏறிய வேதாரண்யம் அவுரிக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என 24 நபர்களை பேருந்தில் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நாகை வந்த அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஓட்டுநர் மற்றும் திருவள்ளுரில் பேருந்தை மறித்து ஏறிய வேதாரண்யம் பகுதியை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை விருகம்பாக்கத்தில் பணிபுரியும் சீர்காழி பகுதியை சேர்ந்த  ஸ்விக்கி நிறுவன ஊழியர் கடந்த 22 ஆம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளை சீர்காழியில் இருக்கும் தனது மாமியார் வீட்டில் விட்டு சென்னை சென்றுள்ளார். அவருக்கு அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருந்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

அதனை தொடர்ந்து சீர்காழியில் உள்ள ஸ்விக்கி ஊழியரின் 8 வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குழந்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க கொரோனா பாதிப்பு நாகையில் உயர்வதற்கு சென்னை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களை காவல்துறை சரியாக கண்காணிக்காமல் மாவட்டத்திற்குள் அனுமதிப்பதே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also see...

தமிழகத்தில் 20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு: இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: