சீனாவிலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயது இளம்பெண் ஒருவருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: January 2, 2021, 7:58 AM IST
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சீனாவிலும் ஒருவருக்கு உருமாறிய தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உருமாறிய கொரோனா தொற்று முதன்முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. பிரிட்டனுக்கு செல்லும் விமானங்களுக்கு இந்தியாவிலும் தடை உள்ளது. இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவ தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயது இளம்பெண் ஒருவருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 29 பேருக்கு உருமாறிய கொரேனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து பல்வேறு நாடுகள் வழியாக இந்தியா வருபவர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 18 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது
இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உருமாறிய கொரோனா தொற்று முதன்முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. பிரிட்டனுக்கு செல்லும் விமானங்களுக்கு இந்தியாவிலும் தடை உள்ளது. இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவ தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயது இளம்பெண் ஒருவருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.